கர்நாடக தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவு

  • IndiaGlitz, [Saturday,May 12 2018]

கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 70% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

கர்நாடக தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சி 106-118 இடங்களை பிடிக்கும் என்றும் பாஜக 79 முதல் 92 இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் நியூஸ் எக்ஸ் என்ற செய்தி நிறுவனம் காங்கிரஸ் கட்சிக்கு 72-78 தொகுதிகள் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு 102-110 இடங்களை பிடிக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

அதேபோல் டைம்ஸ் நவ் எடுத்த கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் 90-103 இடங்களும், பாஜக 80-93 இடங்களும், ஜேடிஎஸ் 31-39 இடங்களும் மற்றவை 2-4 இடங்களையும் பிடிக்கும் என கணித்துள்ளது.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆட்சியை பிடிக்க போவது யார் என்பதை வரும் 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவரும்

More News

பிரபுதேவாவுடன் திருமணமா? நடிகை நிகிஷா பட்டேல் விளக்கம்

பிரபல நடிகர் பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புவதாக சமீபத்தில் நடிகை நிகிஷா பேட்டி ஒன்றில் கூறியிருந்ததாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது.

அஜித்தை நேரில் பார்த்த மதுரை ரசிகர்களின் நெகிழ்ச்சியான பதிவு

தல அஜித் நடித்து வரும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அவரை நேரில் பார்க்க தமிழகத்தின்

நேற்றைய ரிலீஸ் படங்களின் முதல் நாள் வசூல் விபரம்

ஒவ்வொரு வாரமும் தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு குழுவின் பரிந்துரையின்படி மூன்று திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில்

பிரபல நடிகையை 2வது திருமணம் செய்த கமல் பட இசையமைப்பாளர்

கமல்ஹாசன் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'தசாவதாரம்' படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா, தொலைக்காட்சி நடிகை சோனியா கபூரை நேற்றிரவு திடீரென திருமணம் செய்து கொண்டார்.

கமல்ஹாசனின் 'பிக்பாஸ் 2' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.