விரலை காண்பித்தால் தோசை-காபி: கர்நாடக தேர்தலில் வித்தியாசமான முயற்சி
- IndiaGlitz, [Saturday,May 12 2018]
கர்நாடகாவில் இன்று சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவை அதிகரிக்க தனியார் அமைப்புகள் வாக்களித்தவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் வாக்குப்பதிவு செய்ததற்கு அடையாளமாக மைவைத்த விரலை காண்பித்தால் இலவசமாக தோசை மற்றும் காபி வழங்கப்படும் என்று அறிவிப்பு
இன்றைய கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவில் எதிர்பார்த்த வாக்கு சதவீதம் வரவில்லை. மதியம் 3 மணி வரை 56 சதவிகிதம் மட்டுமே பதிவாகி இருந்தது. இதனையடுத்து வாக்குப்பதிவை அதிகரிக்க சில தனியார் அமைப்புகள் ஒருசில அறிவிப்புகளை வெளியிட்டன. அதன்படி வாக்களித்துவிட்டு வருபவர்களுக்கு தோசை காபி இலவசம் என்றும், இலவசமாக இண்டர்நெட் வழங்கப்படும் என்றும், வாக்களித்தவர்கள் பெட்ரோல் போட்டால் லிட்டருக்கு ஒரு ரூபாய் தள்ளுபடி என்றும், தனியார் அமைப்புகள் இதுபோல் பல்வேறு சலுகை அறிவிப்புகளை அறிவித்தனர்.
இந்த அறிவிப்புக்கு ஓரளவு பலன் கிடைத்தது. இதனால் மாலை 5 மணி நிலவரப்படி 61.25% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நம்மூரில் அரசியல் கட்சிகள் ஓட்டுப்போட பணம் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் கர்நாடகாவில் வாக்குப்பதிவை அதிகரிக்க சலுகைகள் வழங்கியது பாசிட்டிவ் விஷயமாகவே கருதப்படுகிறது.