கர்நாடகா தேர்தல் முடிவு: தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு
- IndiaGlitz, [Tuesday,May 15 2018]
கர்நாடக மாநிலத்தில் கடந்த 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் முதல் ஒரு மணி நேரம் காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்தபோதிலும் திடீரென பாஜக தற்போது முன்னிலை பெற்று வருகிறது. இருப்பினும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியும் நல்ல எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வருவதால் கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
சற்றுமுன் வெளியான தகவலின்படி கர்நாடகத்தில் பாஜக 93 தொகுதிகளிலும், காங்கிரஸ் 81 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 33 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சி அமைக்க 112 தொகுதிகள் தேவை என்பதால் தேவகவுடா கைகாட்டும் கட்சியே ஆட்சி அமைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
மேலும் சாமுண்டிஷ்வரி மற்றும் பதானி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் சித்தராமையா, சாமுண்டிஷ்வரி தொகுதியில் பின்னடைவிலும், பதானி தொகுதியில் முன்னிலையிலும் உள்ளார்.