இந்தியாவில் முதல் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை பார்த்த மருத்துவருக்கு கொரோனா..!
- IndiaGlitz, [Tuesday,March 17 2020]
இந்தியாவில் கல்புர்கியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 76 வயதான முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவருக்கு 60 வயதாவதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். முதியவர் முதலில் மருத்துவரிடம் சிகிச்சை பெற வரும் போது கொரோனா உறுதி செய்யப்படாததால் சாதாரணமாக பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சிகிச்சை அளித்துள்ளார். இதனால் மருத்துவருக்கும் கொரோனா வைரஸானது பரவியுள்ளது.
மேலும் இன்று இங்கிலாந்தில் இருந்து கர்நாடகா திரும்பியுள்ள பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கர்நாடகாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றுள்ளவர்கள் 10 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது.
கர்நாடகா முழுவதுமுள்ள எல்லா மால்கள், கடைகள், பப்புகள், திரையரங்குகள், கல்லூரிகள், பள்ளிகள் போன்றவற்றை மூட அவ்வரசு உத்தரவிட்டுள்ளது.