சூரிய கிரகணம், கர்நாடகாவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்து வைத்து மூட நம்பிக்கை வழிபாடு..! வீடியோ.

இந்தியாவில் இன்று தெரிந்த முழு சூரிய கிரகமானது 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒரு நிகழ்வாகும். இன்று நிகழ்ந்த நெருப்பு வளைய சூரியகிரகணத்தின் போது 10 வயதுக்குட்பட்ட சில சிறுவர்களை அவர்களது குடும்பத்தினரே கழுத்துவரை மண்ணில் புதைத்து வைத்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தோன்றியது. தென் தமிழகம், கொச்சின், அஹமதாபாத், புவனேஸ்வர் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தோன்றியது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் கல்புர்கி பகுதியில் உள்ள தாஜ்சுல்தான்புர் என்னும் இடத்தில் 10 வயதுக்குட்பட்ட சில மாற்றுத்திறனாளி சிறுவர்கள் கழுத்துவரை மண்ணில் புதைக்கப்பட்டனர். சூரிய கிரகணத்தின் போது இப்படி செய்தால், குழந்தைகளுக்கு தோல் நோய் ஏற்படாது என்றும், உடல் உறுப்பு பாதிப்புகள் நீங்கும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மண்ணில் புதைக்கப்பட்ட அந்த சிறுவர்கள் கதறி அழுத்த நிலையில், அவர்களது குடும்பத்தினர் அவர்களை சமாதானம் செய்து மண்ணில் இருக்க வைத்தனர். இன்றைய சூரிய கிரகணம் குறித்து சமூகவலைத்தளங்களில் மூடநம்பிக்கையை பரப்பும் பல தகவல்கள் பரப்பப்பட்ட நிலையில், கர்நாடகாவில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஆண்ட்ரியாவை காதலித்து ஏமாற்றிய நடிகர்-அரசியல்வாதி யார்? அவரே அளித்த விளக்கம்

நடிகை ஆண்ட்ரியா ஒரு புத்தகம் எழுதி இருந்ததாகவும் அந்த புத்தகத்தில் அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை காதலித்ததாகவும், ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்ததாகவும்,

சுனைனாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? அவரே அளித்த பதில்!

தனுஷ், மேகாஆகாஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த சுனைனாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது

எளிமை என்றைக்குமே வரவேற்பைப் பெறும்: த்ரிஷா கூறிய உதாரணம்

கடந்த ஆண்டு விஜய் சேதுபதியுடன் த்ஷா நடித்த '96' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்றும் அந்த படத்தில் இடம்பெற்ற ராம், ஜானு ஆகிய கேரக்டர்கள் படம் பார்த்த

"கொடநாடு எஸ்டேட் என்னுடையது".. வருமான வரித்துறையிடம் தெரிவித்த சசிகலா.

கொடநாடு எஸ்டேட்டுக்கு தாமே உரிமையாளர் என்று வருமான வரித்துறையிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.

"இந்தம்மா எங்களுக்கு வேண்டாங்க"..! புதுச்சேரி முதல்வர், குடியரசு தலைவரிடம் கோரிக்கை.

புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமி ஆளுநர் கிரண் பேடியை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வலியுறுத்தியுள்ளார்.