சூரிய கிரகணம், கர்நாடகாவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்து வைத்து மூட நம்பிக்கை வழிபாடு..! வீடியோ.
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் இன்று தெரிந்த முழு சூரிய கிரகமானது 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒரு நிகழ்வாகும். இன்று நிகழ்ந்த நெருப்பு வளைய சூரியகிரகணத்தின் போது 10 வயதுக்குட்பட்ட சில சிறுவர்களை அவர்களது குடும்பத்தினரே கழுத்துவரை மண்ணில் புதைத்து வைத்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தோன்றியது. தென் தமிழகம், கொச்சின், அஹமதாபாத், புவனேஸ்வர் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தோன்றியது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் கல்புர்கி பகுதியில் உள்ள தாஜ்சுல்தான்புர் என்னும் இடத்தில் 10 வயதுக்குட்பட்ட சில மாற்றுத்திறனாளி சிறுவர்கள் கழுத்துவரை மண்ணில் புதைக்கப்பட்டனர். சூரிய கிரகணத்தின் போது இப்படி செய்தால், குழந்தைகளுக்கு தோல் நோய் ஏற்படாது என்றும், உடல் உறுப்பு பாதிப்புகள் நீங்கும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மண்ணில் புதைக்கப்பட்ட அந்த சிறுவர்கள் கதறி அழுத்த நிலையில், அவர்களது குடும்பத்தினர் அவர்களை சமாதானம் செய்து மண்ணில் இருக்க வைத்தனர். இன்றைய சூரிய கிரகணம் குறித்து சமூகவலைத்தளங்களில் மூடநம்பிக்கையை பரப்பும் பல தகவல்கள் பரப்பப்பட்ட நிலையில், கர்நாடகாவில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Karnataka
— TNIE Karnataka (@XpressBengaluru) December 26, 2019
At TajSulthanpur in Kalburgi, kids burried til neck level during solar eclipse. Kids upto 10 yrs are burried , they believe by doing this they can avoid skin diseases & not become physically challenged @Ramkrishna_TNIE @santwana99 @NewIndianXpress @gsvasu_TNIE pic.twitter.com/XFs364U4Jc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments