தமிழகத்தின் அண்டை மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று: பரபரப்பு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று ஒரே நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகிய பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் சற்று முன்னர் வெளியான தகவலின்படி தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் மேலும் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. இதனையடுத்து முதல்வர் எடியூரப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்கள் தனது டுவிட்டரில் கூறியபோது ’எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவித்துள்ளார்
ஏற்கனவே மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தற்போது மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
I have tested positive for coronavirus. Whilst I am fine, I am being hospitalised as a precaution on the recommendation of doctors. I request those who have come in contact with me recently to be observant and exercise self quarantine.
— B.S. Yediyurappa (@BSYBJP) August 2, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments