தமிழகத்தின் அண்டை மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Monday,August 03 2020]

நேற்று ஒரே நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகிய பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் சற்று முன்னர் வெளியான தகவலின்படி தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் மேலும் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. இதனையடுத்து முதல்வர் எடியூரப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்கள் தனது டுவிட்டரில் கூறியபோது ’எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவித்துள்ளார்

ஏற்கனவே மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தற்போது மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

வீடியோவை பார்த்து கண்கலங்கிய சோனுசூட்: ரியல் ஹீரோவின் உணர்ச்சிபூர்வமான காட்சி!

திரையில் வில்லன் நடிகராக இருந்தாலும் இந்த கொரனோ காலத்தில் ஏராளமான பொது மக்களுக்கு உதவி செய்ததன் மூலம் ரியல் ஹீரோவாக மாறியுள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட் என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம்

ரஜினி குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குனர்

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்னரே வெளியான திரைப்படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'.

அமித்ஷா குணமாக குஷ்பு டுவீட்: பரபரப்பு தகவல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மத்திய உள்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸால் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட பல விஐபிக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால்

தமிழக ஆளுனருக்கு கொரோனா தொற்று உறுதி: தனியார் மருத்துவமனை அறிக்கை

தமிழக ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில்