திருமண மேடையில் உயிரிழந்த மணப்பெண்: பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு!

  • IndiaGlitz, [Sunday,February 13 2022]

கர்நாடக மாநிலத்தில் இருந்த கோலார் பகுதியில் சைத்ரா என்ற எம்எஸ்சி படித்த ஆசிரியர் ஒருவருக்கு பெங்களூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்த இரு தரப்பு பெற்றோர்கள் முடிவு செய்தனர். இந்த திருமணத்தை பிப்ரவரி 6ஆம் தேதி நடத்தவும் அதற்கு முந்தையநாள் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி இரவு 9 மணி அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மணப்பெண் சைத்ரா மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து மணப்பெண்ணின் உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளும் நடந்தபின்னர் சைத்ராவின் இறுதிச் சடங்கு அவரது சொந்த கிராமத்தில் நடந்தது என்பதும் இதில் நூற்றுக்கணக்கானோர் சோகத்துடன் அதில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண மேடையிலேயே மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அதனை அடுத்து அவர்களது பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சியான முடிவும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்யும் கிளென் மேக்ஸ்வெல்: தமிழில் திருமண பத்திரிகை!

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருபவருமான கிளன் மேக்ஸ்வெல் ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் நாயகியாகும் உக்ரைன் நடிகை!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

ஓட்காவை ஒரே மடக்கில் குடித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

அமெரிக்காவில் 19 வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய நண்பர்களின் வற்புறுத்தலைக் கேட்டு ஒரே மடக்கில் ஓட்காவை காலி

திருமணத்தால் சர்ச்சை… சிறை தண்டனையை எதிர்நோக்கும் பங்களாதேஷ் வீரர்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான நசீர் ஹொசைன்

உயிரைப் பறித்த லாஸா காய்ச்சல்... கொரோனா மாதிரி பாதிப்பை ஏற்படுத்துமா?

வைரஸ் பெருந்தொற்று நோய்களுள் ஒன்றாகக் கருதப்படும் லாஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் முதல் முறையாக