திருமண மேடையில் உயிரிழந்த மணப்பெண்: பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கர்நாடக மாநிலத்தில் இருந்த கோலார் பகுதியில் சைத்ரா என்ற எம்எஸ்சி படித்த ஆசிரியர் ஒருவருக்கு பெங்களூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்த இரு தரப்பு பெற்றோர்கள் முடிவு செய்தனர். இந்த திருமணத்தை பிப்ரவரி 6ஆம் தேதி நடத்தவும் அதற்கு முந்தையநாள் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி இரவு 9 மணி அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மணப்பெண் சைத்ரா மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து மணப்பெண்ணின் உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளும் நடந்தபின்னர் சைத்ராவின் இறுதிச் சடங்கு அவரது சொந்த கிராமத்தில் நடந்தது என்பதும் இதில் நூற்றுக்கணக்கானோர் சோகத்துடன் அதில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண மேடையிலேயே மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அதனை அடுத்து அவர்களது பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சியான முடிவும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com