கைது செய்யப்பட்ட ராகினி திவேதி பாஜக உறுப்பினரா? கர்நாடக பாஜக விளக்கம்
- IndiaGlitz, [Sunday,September 06 2020]
கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் போதைப்பொருள் விவகாரத்தில் சமீபத்தில் நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையில் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் நடிகை ராகினி திவேதி பாஜக கட்சியை சேர்ந்தவர் என்றும் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாகவும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் கர்நாடக மாநில பாஜக தலைவர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 2019ஆம் ஆண்டு தேர்தலில் பல நடிகர், நடிகைகள் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்தனர். அவர்களில் ஒருவர் நடிகை ராகினி. அவர் பாஜக உறுப்பினர் அல்ல. அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தார்.
மேலும் அவருடைய சொந்த பிரச்சனைகளில் பாஜக தலையிடாது. அதுமட்டுமின்றி இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களுக்கு எப்போதும் பாஜக ஆதரவு தருவதில்லை. எனவே ராகினி திவேதியை காப்பாற்று முயற்சியோ, அவருக்கு ஆதரவாகவோ பாஜக ஈடுபடாது என்று கூறியுள்ளார்.