நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தாதது ஏன்? கருணாஸ் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை ஐகோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்த நிலையில் தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து விஷால் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஷால் மேல்முறையீடு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் கே.பாக்யராஜின் அணியினர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கருணாஸ் கூறியதாவது:
எங்களின் சட்டரீதியான போராட்டம் தொடரும். விரைவில் நீதி கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். நடிகர் சங்க சொத்து என்பது தனி நபரின் சொத்தல்ல; அதற்கு தனிப்பட்ட நபர்கள் யாரும் உரிமை கொண்டாட முடியாது. நான் பதவி வெறி பிடித்தவன் அல்ல; பதவிக்காக எத்தனை லட்சங்களை வேண்டுமானாலும் செலவு செய்வதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை.
தற்போது சங்கமே முடங்கிப்போய் உள்ளது. சங்கத்தில் பணமும் இல்லை. நீதிமன்றம் மறுபடியும் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சொன்னாலும் தேர்தலை நடத்துவதற்கு சங்கத்தில் பணம் இல்லை’ என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments