முதலமைச்சர் வீட்டின் முன் மந்திரம் சொல்ல முயன்ற கருணாஸ் பட நடிகை கைது!
- IndiaGlitz, [Thursday,May 05 2022]
முதலமைச்சர் வீட்டின் முன் மந்திரம் சொல்ல முயற்சித்த நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்துவது .
கருணாஸ் நடித்த ’அம்பாசமுத்திரம் அம்பானி’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் நவ்நீத் கெளர். இவர் ஒரு சில படங்களில் நடித்து மட்டும் நடித்து அதன் பிறகு அரசியலில் இணைந்து விட்டார். அதுமட்டுமின்றி மகாராஷ்டிர மாநில எம்எல்ஏ ரவி ராணா என்பவரையும் திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திடீர் திடீரென கணவருடன் இணைந்து போராட்டங்களும் நடத்தி வருகிறார்.
தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி தொகுதி எம்பியாக இருக்கும் நவ்நீத் கெளர், சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ்தேவ் தாக்கரே வீட்டின் முன்பு அனுமன் மந்திரம் பாடப்போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். நவ்நீட் கவூர் மற்றும் அவரது கணவர் ரவி ராணா ஆகிய இருவரும் முதலமைச்சர் வீட்டின் முன் அனுமன் மந்திரம் பாட முயற்சித்த போது காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டு 11 நாட்கள் ஆகியும் இன்னும் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தபோது ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மந்திரங்களை தனி நபருடைய வீட்டின் முன் வலுக்கட்டாயமாக சொல்வது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விஷயம் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்து கொண்டு இது போன்ற பொறுப்பற்ற வேலைகளில் ஈடுபட கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். இந்த நிலையில் தற்போது நவ்நீத் கெளர் மற்றும் அவரது கணவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் மும்பையில் சொந்த வீட்டில் வசித்து வரும் நவ்நீத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது. இவர்களது வீடு கட்டுமானத்தில் விதிமீறல் இருப்பதாக கூறி மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் இவர்களது வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்படும் என்றும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.