மு.க.ஸ்டாலின், தினகரனுடன் கருணாஸ் சந்திப்பு

  • IndiaGlitz, [Friday,October 12 2018]

சமீபத்தில் முதல்வருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ள எம்.எல்.ஏ மற்றும் நடிகர் கருணாஸ், கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் உடல்நலம் தேறியதை அடுத்து டிஸ்சார்ஜ் ஆனார்.

இந்த நிலையில் இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்த கருணாஸ், தான் சிறையில் இருந்தபோது தனக்கு ஆதரவு கொடுத்த திமுக தலைவருக்கு நன்றி கூறவே சந்தித்ததாக கூறினார்.

இந்த நிலையில் சற்றுமுன் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனையும் அவரது இல்லத்தில் கருணாஸ் சந்தித்து பேசியுள்ளார். கருணாஸை மு.க.ஸ்டாலினும், தினகரனும் பின்னால் இருந்து இயக்குவதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஸ்டாலின், தினகரன் ஆகிய இருவரையும் கருணாஸ் சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

'சண்டக்கோழி 2': கீர்த்தி சுரேஷ் கேரக்டர் குறித்த அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை நோக்கி வேகமாக வளர்ந்து வரும் நடிகை கீர்த்திசுரேஷ் தற்போது தளபதி விஜய்யுடன் 'சர்கார்' மற்றும் விஷாலுடன் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சிரிப்பழகி சினேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கே.ஆர்.விஜயாவுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பெயர் நடிகை சினேகாவுக்கு மட்டுமே பொருத்தமாக இருந்தது.

ரஜினியுடன் இயக்குனர் மகேந்திரன்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு உபி மாநிலத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முறுக்கு மீசையுடன் ரஜினியின் இளமை தோற்றத்து காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

சின்மயி-வைரமுத்து விவகாரம்: கருத்து சொன்ன கமல்ஹாசன்

பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி கடந்த சில நாட்களாக பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். சின்மயியை தொடர்ந்து

சென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் திடீர் தற்கொலை

சென்னையில் பிரபலமான ஐஏஎஸ் அகடாமி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த சங்கரன் என்பவர் இன்று அதிகாலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.