முதல்வரை கருணாஸ் தாக்கி பேசிய வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு

  • IndiaGlitz, [Friday,October 26 2018]

தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசியதாக காமெடி நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் மீது தொடர்ந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நிபந்தனை ஜாமீனில் இருந்து தனக்கு முழு விலக்கு வேண்டும் என்று கருணாஸ் எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை வந்தது. இந்த மனுவில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக காவல்நிலையத்தில் கையெழுத்தடுவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

இறுதியில் நாளை முதல் அதாவது அக்டோபர் 27 முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய காவல்நிலையத்தில் கருணாஸ் எம்,எல்.ஏ கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

More News

யோகிபாபுவின் காதல் பிரச்சனையை தீர்த்து வைத்த ஜோதிகா

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காற்றின் மொழி' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தபோதும் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றது.

'ஜீனியஸ்' படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன்? சுசீந்திரன்

சுசீந்திரன் இயககத்தில் அறிமுக நாயகன் ரோஷன் நடித்த 'ஜீனியஸ்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நடுரோட்டில் ரூ.2000 கோடி: மக்கள் குவிந்ததால் சென்னையில் பரபரப்பு

ரூ.2000 கோடி ஏற்றி கொண்டு வந்த கண்டெய்னர் லாரி ஒன்று சென்னையில் நடுரோட்டில் திடீரென பழுதாகி நின்றதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கசப்பான உண்மை குறித்து ரஜினிகாந்த் அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது ரசிகர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

மீண்டும் இரட்டை வேடங்களில் சிம்பு!

'மன்மதன்' மற்றும் 'சிலம்பாட்டம்' படங்களை அடுத்து சிம்பு மீண்டும் இரட்டை வேடங்களில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.