'கர்ணன்' செகண்ட் சிங்கிள் டைட்டில் மற்றும் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தை கலைபுலி எஸ் தாணு அவர்கள் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் என்பது தெரிந்ததே.
இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. அந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் சமீபத்தில் சிங்கிள் பாடலாக வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என ஏற்கனவே கலைப்புலி எஸ் தாணு அவர்கள் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் நாளை மாலை 05.03 மணிக்கு செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும் இந்த பாடல் ’பண்டாரத்தி புராணம்’ என்று தொடங்கும் என்றும் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் அறிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Get ready folks, #Karnan Paadal 2 #PandarathiPuranam from tomorrow 5:03 PM #YeaaluPandarathi @dhanushkraja @Music_Santhosh @mari_selvaraj @thinkmusicindia @KarnanTheMovie pic.twitter.com/OGHpOAszwu
— Kalaippuli S Thanu (@theVcreations) March 1, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments