'கர்ணன்' செகண்ட் சிங்கிள் டைட்டில் மற்றும் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தை கலைபுலி எஸ் தாணு அவர்கள் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. அந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் சமீபத்தில் சிங்கிள் பாடலாக வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என ஏற்கனவே கலைப்புலி எஸ் தாணு அவர்கள் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நாளை மாலை 05.03 மணிக்கு செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும் இந்த பாடல் ’பண்டாரத்தி புராணம்’ என்று தொடங்கும் என்றும் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் அறிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என்ன ஒரு எடிட்டிங்? 'கண்டா வரச்சொல்லுங்க' பாடலுக்கு 'குக் வித் கோமாளி' புகழ் வீடியோ!

தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்டா வரச்சொல்லுங்க' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் கிராமிய பாடகி மாரியம்மாள் என்பவர் பாடிய இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும்

பள்ளி நாட்களும், பல்லாவரம் மலையும்: சமந்தாவின் வீடியோ வைரல்!

தந்தை பள்ளிநாட்களில் பல்லாவரம் அருகே வாழ்ந்த மலரும் நினைவுகளை நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் 

எங்க பரம்பரையிலேயே முதல் கார், அம்மா அழுதுட்டாங்க: 'குக் வித் கோமாளி' புகழ் வீடியோ!

குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ், சமீபத்தில் சொந்த சம்பாதிப்பில் கார் வாங்கினார் என்பதும் இந்த காருடன் அவர் நின்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்

பார்த்திபன், ஆர்ஜே பாலாஜி வெளியிட்ட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வைரல்!

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் மற்றும் ஆர்ஜே பாலாஜி ஆகிய இருவரும் தங்களுடைய சமூக வலைதளங்களில் இளம் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்து வரும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்

அரசு இதழில் இடம்பெற்ற 10.5% உள் இடஒதுக்கீடு செய்தி… முதல்வருக்கு குவியும் பாராட்டு!

வன்னியர்கள் 40 ஆண்டு காலமாக இடஒதுக்கீட்டு முறையில் உள் இடஒதுக்கீட்டு அம்சத்தை கோரி வருகின்றனர்