நடிகை ரஜிஷா விஜயன் காதலர் இந்த திரையுலக பிரபலமா? திருமணம் எப்போது?

  • IndiaGlitz, [Monday,February 05 2024]

தமிழ் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகையான ரஜிஷா விஜயன் கடந்த சில ஆண்டுகளாக திரையுலக பிரபலம் ஒருவரை காதலித்து வரும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

பிரபல மலையாள நடிகையான ரஜிஷா விஜயன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’கர்ணன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ கார்த்தி நடித்த ’சர்தார்’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை ரஜிஷா விஜயன் மலையாள திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரான டோபின் தாமஸ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் டோபின் தாமஸ் தனது சமூக வலைதளத்தில் ரஜிஷாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து தங்களது காதலை மறைமுகமாக உறுதி செய்துள்ளார்.

இதனை அடுத்து ரஜிஷாவின் தோழிகள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து திருமணம் எப்போது என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். விரைவில் இவர்களது திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சமூக வலைத்தளத்தில் அறிமுகமான இளம்பெண்.. நிர்வாண பட ஆசை காட்டி நடிகரை ஏமாற்றிய சம்பவம்..!

நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோ அனுப்புவதாக ஆசை காட்டி துணை நடிகர் ஒருவரிடம் இளம்பெண் ஒருவர் பண மோசடி செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிப்ரவரி 9ல் வெளியாகும் படக்குழுவிற்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து.. நெகிழ்ச்சி அடைந்த ஹீரோ..!

பிப்ரவரி 9ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' மணிகண்டன் நடித்த 'லவ்வர்' உள்பட ஒரு சில திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'லவ்வர்'

தமிழ் பாடகர் உள்பட இந்திய இசைக்குழுவுக்கு கிராமி விருது.. ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து..!

தமிழ் பாடகர் உள்பட இந்திய இசைக் குழுவின் ஆல்பத்திற்கு கிராமிய விருது கிடைத்துள்ளதை அடுத்து  இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

மெகா ஸ்டாருடன் 18 ஆண்டுகள் கழித்து இணையும் த்ரிஷா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

18 ஆண்டுகள் கழித்து மெகா ஸ்டார் உடன் மீண்டும் த்ரிஷா இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதோடு இது குறித்த வீடியோவும் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில்

விஜய் கட்சி அழைப்பு விடுத்தால் சேர்வீர்களா? கேபிஒய் பாலா சொன்ன பதில்..!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கியுள்ள நிலையில் இந்த கட்சியில் தன்னார்வலர்கள், சமூக சிந்தனை உள்ளவர்களை சேர்க்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.