நடிகை ரஜிஷா விஜயன் காதலர் இந்த திரையுலக பிரபலமா? திருமணம் எப்போது?

  • IndiaGlitz, [Monday,February 05 2024]

தமிழ் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகையான ரஜிஷா விஜயன் கடந்த சில ஆண்டுகளாக திரையுலக பிரபலம் ஒருவரை காதலித்து வரும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

பிரபல மலையாள நடிகையான ரஜிஷா விஜயன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’கர்ணன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ கார்த்தி நடித்த ’சர்தார்’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை ரஜிஷா விஜயன் மலையாள திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரான டோபின் தாமஸ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் டோபின் தாமஸ் தனது சமூக வலைதளத்தில் ரஜிஷாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து தங்களது காதலை மறைமுகமாக உறுதி செய்துள்ளார்.

இதனை அடுத்து ரஜிஷாவின் தோழிகள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து திருமணம் எப்போது என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். விரைவில் இவர்களது திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.