50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி: 'கர்ணன்' தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Thursday,April 08 2021]

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து ஊரடங்கு உள்பட ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் தமிழக அரசு ஊரடங்கு அறிவிக்கவில்லை என்றாலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் அவற்றில் ஒன்று திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் நாளை ரிலீசாக இருக்கும் தனுஷின் ‘கர்ணன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் ‘கர்ணன்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: ‘கர்ணன்’ திரைப்படம் ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை திரையரங்குகளில் வெளியாகும். அரசு அறிவித்துள்ள 50 சதவீத இருக்கைகள் அனுமதி என்ற கட்டுப்பாட்டில் ‘கர்ணன்’ திரைப்படம் வெளியாகும். அதே போல் அரசு அறிவித்த அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் திரையரங்குகளில் கடைபிடிக்கப்படும். ரசிகர்கள் அனைவருக்கும் நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவெனில் அனைவரும் பாதுகாப்புடன் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து ‘கர்ணன்’ திரைப்படத்தை ரசிக்க வாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்

இதனை அடுத்து 50% இருக்கைகள் என்றாலும் ‘கர்ணன்’ திரைப்படம் நாளை திட்டமிட்டபடி ரிலீசாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.