என்னை இமயத்தின் உச்சியில் உட்கார வைத்துவிட்டார்: மாரி செல்வராஜ் குறித்து மாரியம்மாள்!

  • IndiaGlitz, [Tuesday,February 23 2021]

தனுஷ் நடித்து முடித்துள்ள ’கர்ணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடலை பாடிய மாரியம்மாள் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் மாரி செல்வராஜ் அவர்கள் என்னை இமயத்தின் உச்சியில் போய் உட்கார வைத்து விட்டார் என்று கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

கிராமிய பாடல்கள் பாடும் மாரியம்மாள் பாடிய கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த பாடல் உருவான விதம் குறித்து நம்மிடம் மாரியம்மாள் பகிர்ந்துகொண்டார். முதன்முதலில் மாரி செல்வராஜ் தன்னிடம் போனில் பேசிய போது தான் நம்பவில்லை என்றும் அதன்பிறகு ஆச்சரியம் அடைந்ததாகவும் தன்னுடைய பாடலை ஏதோ ஆடியோ ஒலி கேட்டு அவர் என்னை அழைத்ததாகவும் கூறினார் அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எனக்கு போன் செய்து என்னை வரச் சொன்னார் என்றும், அதன் பிறகு நான் பாடிய பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறினார். நான் பாடிய பாடலை கேட்டு தனுஷ் அவர்கள் பாராட்டியதாகவும் அந்த பாராட்டு எனக்கு மிகுந்த பெருமையாக இருந்தது என்றும் கூறினார்

என்னை இமயத்தின் உச்சியில் மாரி செல்வராஜ் அவர்கள் உட்கார வைத்து உள்ளார் என்றும் அவருக்கு எனது நன்றி என்று மாரியம்மாள் கூறினார். அவர் அளித்த பேட்டியின் முழு வீடியோவை இதோ பார்க்கலாம்.
 

More News

முதல்வர் விழாவில் புளிசாதம் சாப்பிட்ட 46 பேருக்கு வாந்தி, மயக்கம்!

விராலிமலை அருகே தமிழக முதல்வர் கலந்து கொண்ட விழாவில் பங்கேற்று அங்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 46 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது

ஐபிஎல் ஏலத்தில் ஒரு இலங்கை வீரர் கூட இல்லை ஏன்? உண்மையை உடைக்கும் முன்னாள் வீரர்!

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது.

நிரூபிக்கப்படாத மருந்தை ஏன் பரிந்துரை செய்கிறீர்கள்? ஷர்வர்தனுக்கு ஐஎம்ஏ சரமாரி கேள்வி!

அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யாத கொரோனில் மருந்தை ஏன் கொரோனா வைரஸ் துணை சிகிச்சை மருந்தாகப் பரிந்துரைக் கிறீர்கள் என மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ

US அதிபர் டிரம்ப்- கிம்முக்கு லிப்ட் கொடுக்க நினைத்தாரா? வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவும் வடகொரியாவும் கடந்த 1960 களில் இருந்தே எலியும் பூனையுமாக செயல்பட்டு வருகின்றன.

'மாஸ்டர்' போல் ஒரு திரைப்படம் பாலிவுட்டுக்கு தேவை: இயக்குனர் அனுராக் பாசு

தமிழில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் பொதுமக்களை திரையரங்குகளுக்கு வரவழைத்ததுபோல பாலிவுட்டிலும் ஒரு படம் தேவை என பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு கூறியுள்ளார்