விமர்சனம் செய்யுங்க, ஆனால் ஒரிஜினல் ஐடியில வந்து விமர்சனம் செய்யுங்க: 'கர்ணன்' நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சினிமாவிலும் அதில் நடிப்பவர்களையும் விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் அதே நேரத்தில் ஒரிஜினல் ஐடியில் வந்து விமர்சனம் செய்யுங்கள் என ‘கர்ணன்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் நட்டி நட்ராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். அவர் கேரக்டரில் ஒன்றிப்போய் நடித்ததால் விமர்சன ரீதியில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. ஆனால் சமூக வலைதளங்களில் அவரது கேரக்டரை பலர் கடுமையாக விமர்சனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் படம் வெளியாகி ஒரு சில மாதங்கள் ஆன பின்னரும் தொடர்ந்து நட்டி நடராஜன் கேரக்டரை ஒரு சிலர் விமர்சனம் செய்து வருவதை அடுத்து நட்டி நடராஜன் தனது டுவிட்டரில் ’விமர்சனம் செய்ய உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் அதே நேரத்தில் ஒரிஜினல் ஐடியில் வந்து விமர்சனம் செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: ஒரு படத்துல நடிக்கிறோம்...அதை விமர்சிக்க பலருக்கு உரிமை உண்டு.. ஆனா original id la வாங்க ... fake id la வராதீங்க.. யாருன்னே புரிஞ்சுக்க முடியல..ஜாஸ்தியா வேற comment பண்றீங்க...abusive language வேணாங்க...
ஒரு படத்துல நடிக்கிறோம்...அதை விமர்சிக்க பலருக்கு உரிமை உண்டு.. ஆனா original id la வாங்க ... fake id la வராதீங்க.. யாருன்னே புரிஞ்சுக்க முடியல..ஜாஸ்தியா வேற comment பண்றீங்க...abusive language வேணாங்க...
— N.Nataraja Subramani (@natty_nataraj) May 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com