'கர்ணன்' படத்தில் குதிரையில் வரும் சிறுவன் சீரியல் நடிகரா? வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Wednesday,April 14 2021]

தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்தது என்பது தெரிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் மட்டுமின்றி அனைத்து கேரக்டர்களிலும் நடித்திருந்த நட்சத்திரங்கள் தங்களுடைய அதிகபட்ச நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளனர் என அனைத்து விமர்சகர்களாலும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ’கர்ணன்’ படத்தில் குதிரையுடன் வலம் வரும் ஒரு சிறுவனை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. அந்த சிறுவன் தான் கிளைமாக்ஸ் காட்சியின் போது தனுஷை அழைத்து வருவார் என்பது படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த சிறுவனின் பெயர் காளி என்றும் இந்த சிறுவனுக்கு உண்மையிலேயே குதிரை ஓட்ட தெரியும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் விஷ்ணு நடித்து வரும் ’சத்யா’ சீரியலில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளதை அடுத்து விஷ்ணுவுடன் இந்த சிறுவன் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்ததும் சீரியல் ரசிகர்கள் இந்த சிறுவனா? ’கர்ணன்’ படத்தில் நடித்தது? என்று ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.