படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே மருத்துவமனையில் அட்மிட் ஆன பெண் இயக்குனர்! ஆபத்தான நிலையா?

  • IndiaGlitz, [Tuesday,June 09 2020]

இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனையும் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் முதல்முதலாக தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தவருமான, கர்ணம் மல்லேஸ்வரி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தை பெண் இயக்குநர் சஞ்சனா ரெட்டி இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடித்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இயக்குநர் சஞ்சனா ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த செய்தியை கர்ணம் மல்லேஸ்வரி பட தயாரிப்பாளர் கோனா வெங்கட் மறுத்துள்ளார். இயக்குநர் சஞ்சனா ரெட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உண்மைதான் என்றும் ஆனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் மூன்று நாட்களாக அவர் சரியாக சாப்பிடாததால் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார் என்றும் அவர் மருத்துவமனையில் சாதாரண வார்டில் தான் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவித்தார்.

கர்ணம் மல்லேஸ்வரி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே அப்படத்தின் இயக்குனர் சஞ்சனா ரெட்டி மருத்துவமனையில் அட்மிட் ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ஊடகத்திடம் திடீரென மன்னிப்பு கேட்ட குஷ்பு: என்ன காரணம்?

பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, ஊடகங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஒரு ஆடியோ வைரலானதை அடுத்த இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளதோடு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி எப்போது சந்தைக்கு வரும்??? அமெரிக்கா, சீனா இடையே நிலவும் கடும் போட்டி!!!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் பல வல்லரசு நாடுகளே திணறிக் கொண்டிருக்கின்றன.

தென் கொரியாவுடன் இருக்கும் அனைத்துத் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்படும்!!! காட்டத்தில் வட கொரியா!!!

உலகிலேயே மிகவும் மர்மமான நாடாகவும், சர்வதேச அளவில் அச்சுறுத்தும் நாடாகவும் கருதப்படும் வடகொரியா தற்போது தென் கொரியாவுடன் இருக்கும்

கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் மோசமாகி வருகிறது: எச்சரிக்கை விடுக்கும் WHO!!!

கொரோனா அறிகுறியே இல்லாதவர்கள் மற்றவர்களுக்கு நோயைப் பரப்பி வருகிறார்கள் என்று உலகச் சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கவலைத் தெரிவித்து உள்ளார்.

ஒவ்வொரு நாளும் உச்சமடையும் கொரோனா பாதிப்பு: என்ன ஆகும் தமிழகம்?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருவதால் தமிழகம், குறிப்பாக சென்னை என்ன ஆகும் என்பதை நினைத்தாலே பெரும் அச்சமாக உள்ளது