விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல்: காவல்துறையில் புகார் செய்ய காமெடி நடிகர் முடிவு
- IndiaGlitz, [Monday,October 08 2018]
கடந்த இரண்டு நாட்களாக காமெடி நடிகர் கருணாகரனுக்கு விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்து வருவது தெரிந்ததே. 'சர்கார்' ஆடியோ விழாவில் விஜய் பேசியது குறித்து நடிகர் கருணாகரன் தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவு செய்ததால் விஜய் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கருணாகரனுக்கும் ஆதரவாக ஒருசிலர் கருத்து தெரிவித்து வருவதால் சமூக வலைத்தளமே பரபர்ப்பில் உள்ளது.
இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் டுவிட்டர் மற்றும் செல்போனில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், எனவே அவர்கள் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார். இன்று அவர் காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண் பத்திரிகையாளர் ஒருவர் விஜய் ரசிகர் மீது இதே குற்றச்சாட்டு காரணமாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.