முதல்முறையாக தென்னிந்திய திரையுலகிற்கு வரும் கரீனா கபூர்.. யார் ஹீரோ தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,March 18 2024]

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கரீனா கபூர் முதல் முறையாக தென் இந்திய திரைப்படத்தில் அதுவும் மாஸ் நடிகரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கரீனா கபூர், கடந்த 2012 ஆம் ஆண்டு சையத் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னரும் சினிமா. விளம்பரம் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் முதல் முறையாக கன்னட நடிகர் யாஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க கரீனா கபூர் ஒப்புக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவரே பேசிய போது ’முதல் முறையாக தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் அடிக்கிறேன், பான் இந்திய திரைப்படமான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது எங்கு நடக்கிறது என்று எனக்கு தெரியாவிட்டாலும் இந்த தகவலை நான் ரசிகர்களுக்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ’டாக்ஸிக்’ என்ற திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் தான் கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் ரசிகர்கள் போலவே தென்னிந்திய ரசிகர்களும் அவரை வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கணக்கன்பட்டி சித்தர்: அதிசயங்கள், வாழ்க்கை வரலாறு | ஜோதிடர் ரஞ்சனாவுடன் ஆன்மீக கலந்துரையாடல்

புகழ்பெற்ற ஆன்மீக யூடியூப் சேனல் ஆன்மீக Glitz-இல் இருந்து, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி சித்தர் பற்றிய ஒரு அற்புதமான வீடியோவை Indiaglitz உங்களுக்கு வழங்குகிறது.

'எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டேன்'.. ஆர்யா வெளியிட்ட ஆச்சரிய புகைப்படங்கள்..!

நடிகர் ஆர்யா கடந்தாண்டு மார்ச் மாதம் இருந்த உடற்கட்டு புகைப்படத்தையும் இந்த ஆண்டு மார்ச் மாதம் உள்ள உடற்கட்டு புகைப்படத்தையும் வெளியிட்டு ஒரே ஆண்டில் தான் எப்படி மாறிவிட்டேன்

 5 ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும்.. அண்ணா பல்கலையில் சூர்யா பேச்சு..!

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் '5 ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும்' என்று நடிகர் சூர்யா பேசியுள்ளார்

கலவி என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது என்பதை தனது ஆழ்ந்த கருத்தின் மூலம் விளக்கிய எழுத்தாளர் லதா .

நம்ம சமுதாயத்தில் பொதுவாகவே திருமணத்திற்கு முன்பு எந்த ஒரு பெண்ணோ ஆணோ உடலுறவு வைத்துக் கொள்வதில்லை.............

ஒருவழியாக வந்தது 'கங்குவா' படத்தின் டீசர் அப்டேட்.. உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்..!

சூர்யா நடித்து வரும் 'கங்குவா' படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த டீசர் குறித்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில்