கராத்தே தியாகராஜன் அறிக்கையும் குஷ்புவின் டுவீட்டும்

  • IndiaGlitz, [Monday,March 12 2018]

அகில இந்திய அளவில் உட்கட்சி பூசலுக்கு பெயர் பெற்ற கட்சி காங்கிரஸ் கட்சி. இதை இந்த கட்சியினர்களே ஒப்புக்கொள்வார்கள். காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோஷ்டி இருக்கின்றது என்பதை எண்ணுவது கூட கடினம்தான்

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் கராத்தே தியாகராஜனுக்கும் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்புவுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது,

இந்த நிலையில் கராத்தே தியாகராஜன் ஒரு நீண்ட அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார். அதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கான தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள சிலர் குறித்து அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்,. கட்சியின் உண்மையான, விசுவாசமான தொண்டர்களுக்கு பதவி அளிக்காமல் கட்சிக்கு சம்பந்தமே இல்லாத பலருக்கு பதவி அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் 'நாய் குரைச்சாலும் சூரியன் மறையப்போறதில்லை. புரிஞ்சுக்கிறவங்களுக்கு, சாரி, குலைக்குறவங்களுக்கு புரிஞ்சா சரி என்று கூறியுள்ளார். கராத்தே தியாகராஜனின் அறிக்கைக்கும் குஷ்புவின் டுவீட்டுக்கும் சம்பந்தம் இருக்குமோ என காங்கிரஸ்காரர்கள் குழப்பத்தில் உள்ளனர்.