விஷாலுக்கு வாழ்த்து கூறி வம்பில் மாட்டிக்கொண்ட குஷ்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சுயேட்சைகளும் இந்த முறை அதிகளவில் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் அவர்களுக்கு கூட்டணி கட்சி என்ற முறையில் காங்கிரஸ் ஆதரவு அளித்ததோடு இன்னும் சில தினங்களில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரத்திலும் ஈடுபடவுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் விஷால் திடீரென ஆர்.கே நகரில் போட்டியிடுவதாக அறிவித்து நேற்று வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார். விஷாலின் இந்த திடீர் முடிவுக்கு நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து கொண்டு அதன் கூட்டணி கட்சியை எதிர்த்து போட்டியிடும் விஷாலுக்கு குஷ்பு எப்படி வாழ்த்து கூறலாம் என்று காங்கிரஸ் பிரமுகர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது கட்சிக்கும் கூட்டணிக்கு செய்யும் துரோகம் என்றும் குஷ்பு மீது காங்கிரஸ் தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கராத்தே தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சக நடிகர் என்ற முறையில் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு தற்போது வம்பில் சிக்கியுள்ள குஷ்பு மீது அகில இந்திய தலைமை நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com