ரஜினியை மிரட்டவே ப.சிதம்பரம் வீட்டில் சோதனை: கராத்தே தியாகராஜன்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர்களின் சென்னை நுங்கம்பாக்கம் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இந்தியாவில் உள்ள பல இடங்களில் ஒரே நேரத்தில் இன்று காலை முதல் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனை வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு இருந்த தொடர்பின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சோதனைக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சிபிஐ சோதனை குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான கராத்தே தியாகராஜன் கூறியபோது, 'அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நடைபெறும் சோதனை இது. இத்தனை ஆண்டுகள் கழித்து சோதனை நடைபெறுவதற்கு காரணம் என்ன?. இந்த சி.பி.ஐ சோதனை மூலம் ரஜினிகாந்திற்கு பா.ஜ.க மிரட்டல் விடுகிறது. ரஜினிகாந்த் புதிதாக அரசியல் கட்சி தொடங்காமல் இருப்பதற்கான மிரட்டல் இது' என்று கூறினார்.
அரசியலுக்கு வருவது குறித்து நேற்று ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு மு.க.ஸ்டாலின், தமிழிசை செளந்திரராஜன், திருமாவளவன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் கராத்தே தியாகராஜன் கூறியுள்ள இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments