ஸ்டாலின் 10 மேடைகளில் பேசியதை ரஜினி 10 நிமிடத்தில் பேசுவார்: கராத்தே தியாகராஜன் 

  • IndiaGlitz, [Wednesday,March 04 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை அறிவிப்பார் என ரஜினி ஆதரவாளரும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன் ’ரஜினி மக்கள் மன்றம் என்ற கட்டமைப்பு மிக வலுவாக இருப்பதாகவும் தேர்தல் பூத் உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்து தயார் நிலையில் இருப்பதாகவும், அதிகாரபூர்வமாக கட்சி அறிவிக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி’ என்றும் கூறினார்.

மேலும் இஸ்லாமியர் உள்பட அனைத்து சமுதாய மக்களின் ஆதரவு பெற்று ரஜினிகாந்த் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் 10 மேடைகளில் பேசியதை ரஜினிகாந்த் பத்தே நிமிடத்தில் பேசி அனைவரையும் கவர்ந்து விடுவார் என்றும் தொலைக்காட்சியில் தெரியவேண்டும் என்பதற்காக அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி குறித்து எதையாவது பேசுவார் என்றும் அதை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என்றும் தியாகராஜன் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார்.

More News

முதல்முறையாக இணையும் விஜய்சேதுபதி-சிம்பு! அதிகாரபூர்வ அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் விஜய்சேதுபதி மற்றும் சிம்பு ஆகிய இருவரும் முன்னணி நடிகர்கள் பட்டியலில் உள்ள நிலையில் தற்போது இருவரும் இணையும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது 

விஜய்சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய இளையராஜா!

காக்கா முட்டை குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கி முடித்திருக்கும் அடுத்த படம் 'கடைசி விவசாயி'

ரஜினியின் துக்ளக் விழா பேச்சு: சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் இதழ் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை கூறியதாக திராவிடர் விடுதலை கழகம் வழக்கு பதிவு செய்தது.

முக ஸ்டாலினுடன் நடிகர் பிரபு திடீர் சந்திப்பு!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு இன்று காலை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து உள்ளார். 

"கரணம் தப்பினால் மரணம்" இங்கு தலை மட்டுமே பாக்கி; விவசாயிகளின் விநோத போராட்டம்

ராஜஸ்தானில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தங்களை மண்ணில் புதைத்துக் கொண்டு விநோதமான போராட்டத்தில் ஈடுபட்டது