ஸ்டாலின் 10 மேடைகளில் பேசியதை ரஜினி 10 நிமிடத்தில் பேசுவார்: கராத்தே தியாகராஜன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை அறிவிப்பார் என ரஜினி ஆதரவாளரும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன் ’ரஜினி மக்கள் மன்றம் என்ற கட்டமைப்பு மிக வலுவாக இருப்பதாகவும் தேர்தல் பூத் உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்து தயார் நிலையில் இருப்பதாகவும், அதிகாரபூர்வமாக கட்சி அறிவிக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி’ என்றும் கூறினார்.
மேலும் இஸ்லாமியர் உள்பட அனைத்து சமுதாய மக்களின் ஆதரவு பெற்று ரஜினிகாந்த் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் 10 மேடைகளில் பேசியதை ரஜினிகாந்த் பத்தே நிமிடத்தில் பேசி அனைவரையும் கவர்ந்து விடுவார் என்றும் தொலைக்காட்சியில் தெரியவேண்டும் என்பதற்காக அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி குறித்து எதையாவது பேசுவார் என்றும் அதை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என்றும் தியாகராஜன் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com