ஸ்டாலின்-ரஜினி தலைமையில் இரு அணிகள் உருவாகும்: கராத்தே தியாகராஜன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் அதிகாரபூர்வமாக கட்சியை அறிவிக்கவில்லை என்றாலும் அவருடன் பிரபல அரசியல் தலைவர்கள் அடிக்கடி சந்தித்து ஆலோசானை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சற்றுமுன் காங்கிரஸ் பிரமுகரும் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான கராத்தே தியாகராஜன் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். முரசொலி கட்டுரைக்கு பின் திமுகவும் ரஜினியும் எதிரெதிர் துருவங்கள் போல் இருக்கும் நிலையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் ரஜினியை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின்போது முரசொலி கட்டுரை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் ரஜினியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கராத்தே தியாகராஜன் கூறியபோது, 'வரும் தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும் ரஜினி தலைமையில் ஒரு அணியும் உருவாகும் என தான் கருதுவதாக தெரிவித்தார். மேலும் காங்கிரசுடன் கமல் கூட்டணி குறித்த கேள்விக்கு ரபேல் விமானம் குறித்து கமல் வாய்திறக்கவில்லை என்றும் அவர் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்பட்டு வருவதாகவும் கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com