close
Choose your channels

பிரபல இயக்குனர் வைரலாக்கிய ரஜினி-லதா புகைப்படம்!

Friday, May 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று இந்திய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்கும் விழாவில் திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் இந்த விழாவில் கலந்து கொண்டார். ரஜினிக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது என்பது ஏற்கனவே நேற்று வெளியான வீடியோக்களில் இருந்து தெரிய வந்தது.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர், தயாரிப்பாளர் கரண்ஜோஹர், பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு வந்த விவிஐபிக்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ரஜினி, லதா உள்பட பல பிரபலங்கள் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கரண்ஜோஹர், பிரதமர் நரேந்திரமோடிக்கு தனது வாழ்த்துக்களை கூறியதுடன் இரண்டாவது முறையாக பெருமைக்குரிய பதவியேற்கும் நரேந்திரமோடியின் தலைமையில் இந்தியா முன்னேற்றப்பாதையில் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment