பிரபல இயக்குனர் தான் ஓரினசேர்கையாளர் என்று பகிரங்க ஒப்புதல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் இயக்குனர் கரண்ஜோஹரின் செக்ஸ் வாழ்க்கை குறித்து கடந்த பல வருடங்களாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்து அவரை வெறுப்பேற்றுவது உண்டு. இந்நிலையில் கரண்ஜோஹர் தன்னுடைய சுயசரிதை புத்தகமான' 'An Unsuitable Boy' என்ற புத்தகத்தில் இதுகுறித்து முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
எனது செக்ஸ் வாழ்க்கை குறித்து பலர் பலவிதமாக பேசி வருவதுண்டு. அதற்காக நான் வருத்தப்பட போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் நான் எனது செக்ஸ் வாழ்க்கை குறித்து வெளியே கூறினால் நான் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும். ஏனெனில் எனது உறவு குறித்து புரிந்து கொள்ள முடியாத சட்டதிட்டங்கள் உள்ள நாட்டில் நான் வாழ்ந்து வருகிறேன். எனவே நான் அந்த மூன்றெழுத்து வார்த்தையை வெளிப்படயாக கூறப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் தனது தாயார் ஹிரோ ஜோஹர் அவருக்கு முழு அளவில் ஆதரவாக உள்ளதாக அந்த புத்தகத்தில் கரண்ஜோஹர் தெரிவித்துள்ளார். பூனம் சாக்சேனா உதவியுடன் கரண் ஜோஹர் எழுதியுள்ள இந்த புத்தகம் இம்மாத இறுதியில் வெளிவரவுள்ளது. இந்த புத்தகம் நிச்சயம் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com