மேக்னாராஜ் வளைகாப்பு நிகழ்ச்சியில் மறைந்த கணவர்: கரண் ஆச்சாரியாவின் கலைவண்ணம்!

புகைப்படங்களை புராண சித்திரங்களாக மாற்றும் கரண் ஆச்சாரியா குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். குழந்தைகளின் புகைப்படங்களை அவர்களது பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்கி கிருஷ்ணர் ராமர் போன்று அச்சு அசலாக மாற்றி அவர்களின் பெற்றோர்களை அசர வைத்தவர் தான் இந்த கரண் ஆச்சாரியார். 

தற்போது இவர் நடிகை மேக்னா ராஜ் குறித்து கரண் ஆச்சார்யா ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் மேக்னா ராஜின் ரசிகர் ஒருவர் கரணிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியான நடிகை மேக்னாராஜ், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்ததாகவும் இந்த நிகழ்ச்சியின் போது அவர் தனது மறைந்த கணவரின் கட்அவுட்டை அருகில் வைத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

எனவே அவருடைய ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் மேக்னாராஜ் வளைகாப்பு நிகழ்ச்சியில் அவரது மறைந்த கணவர் சிரஞ்சீவி சார்ஜா அருகில் இருப்பது போன்று புகைப்படத்தை மாற்றித் தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளை ஏற்ற கரண் ஆச்சாரியா, கர்ப்பிணியான மேக்னாராஜ் அருகில் அவரது கணவர் சிரஞ்சீவி சார்ஜா அவரது கையை பிடித்து நிற்பது போல் மாற்றியுள்ளார். இந்த புகைப்படத்தை சிரஞ்சீவி சார்ஜாவின் ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருவதால் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

லிவிங் டுகெதர் ரிலேஷனில் இருந்த பெண் டாக்டருக்கு ஏற்பட்ட விபரீதம்!

திருமணமாகி விவாகரத்துப் பெற்ற பெண் டாக்டர் ஒருவர், வாலிபர் ஒருவருடன் லிவிங் டுகெதர் ரிலேஷனில் இருந்த நிலையில் அவருடன் ரிலேஷனில் இருந்தவராலேயே கத்தியால் குத்தி கொலை

பிக்பாஸ் முதல் நாள்: அசத்தும் அறந்தாங்கி நிஷா! சிடுமூஞ்சியா ஷிவானி? இன்னொரு ஜூலியா சனம்?

பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று முன்தினம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதனையடுத்து நேற்று பிக்பாஸ் வீட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன 

என்ன ஆகணும் உங்களுக்கு? ஷிவானியை மடக்கிய ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கலகலப்பாக தொடங்கி நேற்று முதல் நாள் நிகழ்ச்சிகளும் ஆரம்பமாகிவிட்டன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் முதல்நாள் நிகழ்ச்சி இருந்த நிலையில்

எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்… பகவத் கீதை வழியே ஓபிஎஸ் சொல்ல வருவது???

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

பாவப் பட்டவர்களுக்கே அறிவுரை சொல்வதா? இதென்ன நியாயம்? ராகுல் காந்தி காட்டம்!!!

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து பாஜக எம்எல்ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டு உள்ளார்.