உருவாகிறதா 'கரகாட்டக்காரன் 2'? ராமராஜனுக்கு பதில் இந்த காமெடி ஹீரோவா?

  • IndiaGlitz, [Sunday,March 26 2023]

ராமராஜன், கனகா நடிப்பில், கங்கை அமரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவான ’கரகாட்டக்காரன்’ என்ற திரைப்படம் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான ’கரகாட்டக்காரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 34 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

’கரகாட்டக்காரன்’ இயக்குனர் கங்கை அமரனின் மகனும் இயக்குனருமான வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ராமராஜன் கேரக்டரில் மிர்ச்சி சிவா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ராமராஜன், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ’கரகாட்டக்காரன்’ திரைப்படத்திற்கு இளையராஜாவின் இசை மிகப்பெரிய பலமாக இருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல வெற்றி திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் தமிழ் திரை உலகில் உருவாகி வரும் நிலையில் ’கரகாட்டக்காரன்’ படத்தில் இரண்டாம் பாகமும் உருவாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'காலா' நடிகை ஈஸ்வரிராவ் கணவர் ஒரு இயக்குனரா? அர்ஜூனின் இத்தனை படங்களை இயக்கியுள்ளாரா?

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'காலா' என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ஈஸ்வரி ராவின் கணவர் எல்.ராஜா என்பவர் ஒரு இயக்குனர் என்பது பலருக்கு

'கேப்டன் மில்லர்' போர்க்காட்சிகளின் வீடியோ லீக்? அதிர்ச்சியில் படக்குழுவினர்..!

தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி அருகே உள்ள காடுகளில்

மனைவியை விவாகரத்து செய்து விட்டேன்: 'ஜெயிலர்' பட நடிகர் அறிவிப்பு..!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்துள்ளதை அடுத்து

3 வார இடைவெளியில் மற்றொரு காஜல் அகர்வால் படம் ரிலீஸ்: தேதி அறிவிப்பு..!

காஜல் அகர்வால் நடித்த 'கோஸ்டி' என்ற திரைப்படம் மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் த்ரில் மற்றும் நகைச்சுவை திரைக்கதை அம்சம் கொண்டது என்பதால் பல ரசிகர்களை கவர்ந்தது

'லவ்டுடே' ஹிந்தி ரீமேக்.. இரண்டு பிரபலங்களின் வாரிசுகள் நடிக்கின்றார்களா?

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான 'லவ் டுடே' திரைப்படம் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதும் இந்த படத்தின் மிகப்பெரிய