இந்தியன் 2' படத்திற்கு வசனம் எழுதும் பிரபல கவிஞர்

  • IndiaGlitz, [Friday,March 23 2018]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் 2.0 உள்பட பல படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் தற்போது பிரபல கவிஞர் கபிலன் வைரமுத்து இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் வசனம் எழுதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே அஜித்தின் 'விவேகம்', கே.வி.ஆனந்தின் 'கவண்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சிகு பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினியுடன் கார்த்திக் சுப்புராஜ் திடீர் சந்திப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் முடிந்துள்ள '2.0' மற்றும் 'காலா' ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வெளிவரவிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை பார்த்தோம்

குரங்கணி தீவிபத்து: இன்று ஒரே நாளில் இருவர் பலி

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் மற்றும் சுற்றுலா சென்ற 36 பே சிக்கி கொண்டதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகினர்.

சமந்தாவின் அடுத்த படத்தில் மிஷ்கின் பட நாயகன்

சமந்தா நடிக்கவுள்ள அடுத்த படமான 'யூடர்ன்' தமிழ் ரீமேக் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு குறித்த ஆலோசனையில் இயக்குனர் பவன்குமார் உள்ளார்.

500 நாளில் ஒருநாள் கூட விஜய் தவறியதில்லை: இயக்குனர் பரதன்

பரதன் இயக்கத்தில் விஜய் 'அழகிய தமிழ்மகன்' மற்றும் பைரவா' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதுபோல் விஜய் நடித்த 'கில்லி' மற்றும் 'மதுர' ஆகிய படங்களுக்கு பரதன் வசனம் எழுதியுள்ளார்

போயஸ் கார்டனில் தினேஷ் கார்த்திக்-தீபிகாவின் கனவு இல்லம்

தினேஷ் கார்த்திக் சமீபத்தில் இலங்கையில் நடந்த மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்தியாவின் ஹீரோவாக மாறினார்.