அஃப்ரிடியை ரவுண்டு கட்டி அடிக்கும் கபில்தேவ், சச்சின், கோஹ்லி காம்பீர், சுரேஷ்ரெய்னா

  • IndiaGlitz, [Thursday,April 05 2018]

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃபரிடி சமீபத்தில் தனது டுவிட்டரில் காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் வருத்தமளிக்கும் வகையிலும், அபாயகரமான வகையிலும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் அங்கு போராட்டம் நடத்தி வருபவர்களின் குரலை ஒடுக்க அவர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிகழ்வுகளை தடுக்க ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சர்யமளிப்பதாகவும் அஃப்ரிடி தெரிவித்திருந்தார்.

அஃப்ரிடியின் இந்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து தற்போது பார்ப்போம்

கபில்தேவ்: யார் அவர்...? ஏன் அவருக்கு எல்லாம் நாம் முக்கியதுவம் கொடுக்க வேண்டும்.? சில நபர்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது’

சச்சின் தெண்டுல்கர்: நமது நாட்டை நிர்வகிக்க திறமையான நபர்கள் உள்ளனர். நமது நிர்வாகம் குறித்து வெளி நபர்கள் கருத்து தெரிவிக்க வேண்டியதில்லை

விராத் கோஹ்லி: ‘ஒரு சின்ன திருத்தம். அது என்ன இந்தியா ஆக்கரமித்துள்ள காஷ்மீர்? காஷ்மீர் இப்போதும் எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கம்தான்’

கவுதம் காம்பீர்: ஐக்கிய நாடுகள் சபை (UN) குறித்து அஃப்ரிடி பேசுகிறார். அவரது அகராதியில் யு.என். என்பதற்கு அண்டர் நைண்டீன் (19 வயதிற்குட்பட்ட) என்பதே பொருள். ஊடகங்கள் இதுகுறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அஃப்ரிடி நோ பாலில் விக்கெட் வீழ்ந்ததைக் கொண்டாடுகிறார்

சுரேஷ் ரெய்னா:காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி. அது, எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருக்கும். எங்கள் மூதாதையர்கள் பிறந்த புண்ணிய பூமி அது. எங்கள் காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் ஆக்கிரமித்து போர் நடத்திவரும் பாகிஸ்தான் ராணுவத்திடம், அவற்றை நிறுத்துமாறு ஷாகித் அஃப்ரிடி சொல்லுவார் என்று நம்புகிறேன். நாங்கள் விரும்புவது வன்முறையை அல்ல; அமைதியை மட்டுமே

 

More News

காவிரி பிரச்சனைக்காக கைகோர்க்கும் ரஜினி-கமல்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து போராட கட்சிகளும், போராட்டத்தில் கலந்து கொள்ளாத அரசியல் தலைவர்களும் தமிழகத்தில் இல்லை என்று கூறலாம்.

காமன்வெல்த் போட்டி: பதக்கப்பட்டியலை தொடங்கியது இந்தியா

ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்கோஸ்ட் நகரில் கண்ணைக்கவரும் வண்ண நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

ஒத்திவையுங்கள், மீறினால் அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது: பாரதிராஜா எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் தீவிர போராட்டம் நடந்து வருகின்றது.

செய்யுங்கள் அல்லது தள்ளி நில்லுங்கள்: திருச்சி மாநாட்டில் கமல்

காவிரிப் பிரச்னையை மய்யம்கொள்ளும் இடமாக இந்த மேடை இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக குழப்பம் அதிகரித்து வருகிறது. மத்தியில் நடக்கும் அரசை நீங்கள் குற்றம் சாட்டவில்லையே எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் 'அருவி' நடிகை

அறிமுக இயக்குனர் அருண்பிரபு இயக்கிய 'அருவி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று அந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது.