முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி!!!

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும் ஆல்ரவுண்டர் விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த கபில் தேவ் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்படும் கபில் தேவ் கடந்த 1983 ஆம் ஆண்டு இந்தியா முதல் உலகக் கோப்பையைப் வென்ற போது அணியை வழிநடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் குறித்தும் தனது கருத்துகளை கபில் தேவ் தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து பதிவு செய்து வந்தார்.

இந்நிலையில் திடீரென கபில் தேவுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவர் டெல்லியில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப் பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு ஏற்கனவே நீரிழிவு தொடர்பான உடல்நலக் கோளாறு இருந்ததாகவும் அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

More News

சிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் விஜய், விஜய்சேதுபதி பட நாயகி!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம்

கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த கவுண்டமணி!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் காமெடி நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி திடீரென உடல்நலக் குறைவாக இருப்பதாக வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

நயன்தாரா, காஜல் அகர்வால், வாணிபோஜன்: நவம்பரில் நட்சத்திர கொண்டாட்டம்!

தமிழகத்தில் இன்னும் திரையரங்கங்கள் திறக்காத நிலையில் பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்கு இருக்கும் ஒரே ஆப்ஷன்

பாரபட்சமானவர் அர்ச்சனா: பாலாஜியின் அழுத்தமான குற்றச்சாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக  நுழைந்து ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்த 15 பேர்களை முந்தி வருகிறார் அர்ச்சனா. ஆனால் அதே நேரத்தில் அனைத்து விஷயத்திலும் மூக்கை நுழைத்து

கொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர்!!! 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி!!!

கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக முதல்வர் அதிக முதலீடுகளை ஈர்த்து புதிய தொழில் திட்டங்களை உருவாக்குவதற்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து உள்ளார்.