கொரோனா நிதிக்காக கிரிக்கெட் போட்டி: யோசனை கூறிய அக்தருக்கு பதிலடி கொடுத்த கபில்தேவ்

கொரோவை தடுக்க நிதி திரட்ட வேண்டும் என்றும், அதற்கு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் யோசனை கூறியுள்ளார். இந்த யோசனைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

கிரிக்கெட் போட்டி நடத்தி தான் நிதி திரட்ட வேண்டும் என்ற அவசியம் இந்தியாவுக்கு இல்லை என்றும் பாகிஸ்தானுக்கு நிதி தேவை என்றால் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு பதிலாக எல்லையில் அத்துமீறல்களை நிறுத்தி அதில் மிச்சமாகும் பணத்தை வைத்து மருத்துவமனைகள் கட்டிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தியா ஆன்மிக பூமி என்பதால் இங்கு ஏராளமான ஆன்மிக அமைப்புகள் இருக்கின்றன என்றும் அவர்கள் அரசுக்கு உதவுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா விடுமுறையால் ஏற்படும் முக்கிய பாதிப்பு குறித்து கபில்தேவ் கூறியபோது, ‘பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பற்றி கவலைப்படுவதாகம் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் கல்வி என்னவாகும் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாகவும், கிரிக்கெட் போட்டிகளை விட பள்ளிகள் திறப்பதே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். கபில்தேவின் இந்த கருத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.