திருமணமான சில நாட்களில் 100 பவுன் நகைகளுடன் காதலனுடன் மாயமான மணப்பெண்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரு சில நாட்களில் காதலனுடன் 100 பவுன் தங்க நகையுடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை எந்த பகுதியில் அரசு ஊழியராக பணிபுரிந்து வருபவர் வேல்முருகன். இவருக்கும் ராஜஸ்ரீ என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து விடுமுறையும் முடிந்த நிலையில் வேல்முருகன் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணமகன் ராஜஸ்ரீ தனக்கு வரதட்சணையாக கிடைத்த 100 பவுன் நகைகள் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களுடன் திடீரென மாயமானார். இதுகுறித்து வேல்முருகன் தரப்பினர் காவல்துறையில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் ராஜஸ்ரீ வசித்த பகுதியில் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞரும் மாயமானது தெரியவந்தது. இதனால் சந்தோஷ் மற்றும் ராஜஸ்ரீ ஆகிய இருவருக்கும் காதல் இருந்திருக்கலாம் என்றும் இருவரும் பேசி வைத்து ஓடிப் போய் இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து சந்தோஷின் பெற்றோர்களும், ராஜஸ்ரீ பெற்றோர்களும் மாறி மாறி புகார் அளித்தனர். இந்த நிலையில் சந்தோஷ் தந்தை இந்த அவமானத்தை தாங்க முடியாமல் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட சந்தோஷ் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இரு தரப்பினர் மாறி மாறி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான ராஜஸ்ரீ மற்றும் சந்தோஷத்தை தேடி வருகின்றனர். திருமணமான சில நாட்களில் காதலனுடன் இளம்பெண் ஒருவர் திடீரென மாயமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments