தாய்-மகள்களிடம் கள்ளக்காதல்: வெளிநாட்டில் இருந்து திரும்பியவருக்கு நேர்ந்த கதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒரு நபர், பெண் ஒருவரிடம் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருடைய மகள்களிடமும் கள்ளக்காதலில் ஈடுபட்ட முயற்சி செய்ததால் பரிதாபமான வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு பின்னர் ஊருக்கு திரும்பி கட்டிட கட்டுமான பணி வேலையை செய்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் வெளிநாட்டில் இருந்ததால் அவர் தன்னுடைய நண்பர் என்று கூறி அலெக்சாண்டர் அந்த பெண்ணிடம் நட்புடன் பழகி ஒரு சில உதவிகளையும் செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கள்ளக்காதல் வைத்திருந்த அந்த பெண்ணின் மகள்களிடம் அலெக்சாண்டர் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறார். இதனால் தன்னுடைய மகள்களின் வாழ்க்கை பாழாகி விடுமோ என்ற பயத்தில் அலெக்சாண்டரை அந்தப் பெண் தவிர்த்ததாகதெரிகிறது.
இந்த நிலையில் அந்த பெண்ணின் மகன் ஜவஹர், தன்னுடைய தாயாரும் சகோதரிகளும் அலெக்சாண்டரிடம் சிக்கி உள்ளதை அறிந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டார். தன்னுடைய நண்பர்கள் துணையுடன் கடந்த 25ஆம் தேதி அலெக்சாண்டர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு வாகனத்தை கொண்டு மோதி அலெக்சாண்டரை கீழே விழ செய்துள்ளனர். அதன் பின்னர் அலெக்சாண்டர் முகத்தில் மிளகாய் பொடியை தூவி நிலைகுலையச் செய்து ஜவஹரும் அவரது நண்பர்களும் அலெக்சாண்டரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கன்னியாகுமரி போலீசார் விசாரணை செய்தபோது ஜவஹர் மற்றும் அவரது கூட்டாளிகள் தான் கொலை செய்தனர் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout