ஆஸ்பத்திரி அறையில் கள்ளக்காதலனுடன் நர்ஸ்: வெளியே பூட்டி சிறை வைத்த பொதுமக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னியாகுமரி அருகே 35 வயது நர்ஸ் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் மருத்துவமனை அறை ஒன்றில் உல்லாசமாக இருந்ததை அடுத்து, அந்த பகுதி பொதுமக்கள் அவர்களை பூட்டி சிறை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி அருகே உள்ள அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வரும் 35 வயது பெண் ஒருவருக்கு டிரைவர் ஒருவர் கள்ளக்காதலனாக இருந்ததாக தெரிகிறது அந்த டிரைவர் அவ்வப்போது நர்ஸ் பணிபுரியும் மருத்துவமனைக்கு நள்ளிரவு வந்து கொண்டிருப்பதாகவும், இருவரும் காலியாக இருக்கும் அறையில் ஜாலியாக இருந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதனை அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் கண்காணித்து இருவரையும் கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று இரவு நர்ஸை பார்ப்பதற்காக கள்ளக்காதலன் பைக்கில் வந்ததை அடுத்து, அவர் பின் தொடர்ந்து சென்ற இளைஞர்கள் நர்ஸ் இருக்கும் அறையில் கள்ளக்காதலன் நுழைந்தவுடன் அறையை வெளியே பூட்டி விட்டனர்.
உடனடியாக இதுகுறித்து இளைஞர்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து கள்ளக்காதல் ஜோடி உள்ளே இருப்பதாக தெரிவித்தனர். இதன் பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் கதவை திறந்து பார்த்த போது இருவரும் குளியலறையில் ஒளிந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அந்த டிரைவர் தனது கணவர் என்று நர்ஸ் கூறினாலும் அதன் பின்னர் பொதுமக்களின் மிரட்டலுக்கு பயந்து தன்னுடைய கள்ளக்காதலன் தான் அவர் என்றும் இனிமேல் இந்த மாதிரி தவறு செய்ய மாட்டோம் என்றும் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டனர். இதனை அடுத்து விடிய விடிய சிறையில் வைக்கப்பட்டிருந்த கள்ளக்காதல் ஜோடியை எச்சரித்து விடுவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout