1200 கிமீ, 4 நாட்கள், தெலுங்கானா - கன்னியாகுமரி: பைக்கில் வந்த இஞ்சினியர்

தெலங்கானா மாநிலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் நான்கு நாட்கள் பயணம் செய்து கன்னியாகுமாரி வந்த இன்ஜினியர் ஒருவர் குறித்த செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரல்வாய்மொழி என்ற பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்ற 24 வயது இளைஞர் கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கானா மாநிலத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். கொரோனா வைரஸ் காரணமாக திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஜெயப்பிரகாஷ் தவித்தார். ஹோட்டல்களும் சரியாக இல்லாததால் பசி பட்டினியுடன் இருந்த ஜெயப்பிரகாஷ், தனது இருசக்கர வாகனத்திலேயே சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார்.

இதனை அடுத்து அவர் கலெக்டரிடம் அனுமதி பெற்று தனது இருசக்கர வாகனத்தில் 1200 கிலோமீட்டர் சொந்த ஊரை நோக்கி பயணம் செய்தார். நான்கு நாட்களிலும் அவர் வாங்கி வைத்து இருந்த பிஸ்கட் மற்றும் தண்ணீர் மட்டுமே அவருக்கு உணவாக இருந்துள்ளது. இந்த நிலையில் நான்கு நாட்கள் 1200கிமீ பயணம் செய்த அவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செக்போஸ்டில் போலீசார் சோதனை செய்தனர். பின்னர் அவருக்கு கொரோனோ பரிசோதனையும் செய்யப்பட்டது. அவருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது முடிவு செய்யப்பட்ட நிலையிலும் அவர் 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார்.

இந்த நிலையில் நான்கு நாட்கள் வெறும் பிஸ்கட்டை மட்டுமே சாப்பிட்டு 1,200 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்த ஜெயப்பிரகாஷ் பார்த்ததும் அவரது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

எஸ்.எஸ்.ராஜமெளலி சேலஞ்சை ஏற்று கொண்ட பிரபல ஹீரோ!

இந்த கொரோனா விடுமுறை நேரத்தில் திரையுலக பிரபலங்கள் இடையே வீட்டு வேலைகளை செய்து பெண்களுக்கு உதவும் #BetheREALMAN என்ற சேலஞ்ச் பரவி வருகிறது என்பதும்,

இந்தியாவில் கொரோனா ஏற்படுத்தியிருக்கும் புதிய சிக்கல்!!! கவலையில் இந்திய மருத்துவக் கழகம்!!!

வளரும் நாடுகளில் கொரோனா பரிசோதனையின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது.

சிலர் ஏன் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்??? காரணங்களை வெளியிட்ட சென்னை விஞ்ஞானிகள்!!!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட SGRF என்ற தனியார் மரபணு ஆய்வுக்கூடத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள்

எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்போய் கொரோனா கசிந்தது… நோபல் பரசுபெற்ற விஞ்ஞானி கருத்து!!!

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற மருத்துவர் லூக் மாண்டாக்னியர் கொரோனா வைரஸ் வுஹான் நகரத்து ஆய்வகத்தில் இருந்து வெளியானது எனக் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

வடகொரியா அதிபருக்கு அறுவை சிகிச்சை: உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்

அமெரிக்காவுடன் அணு ஆயுத சோதனை விவகாரத்தில் அவ்வப்போது மோதி வரும் வடகொரியா அதிபருக்கு சமீபத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் இதனையடுத்து அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும்