இது ஒரு சாதாரண திரைப்படம் அல்ல.. போர்க்குரல்! ரிலீஸ் தேதியை அறிவித்த 'காந்தாரா' ரிஷப் ஷெட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
‘காந்தாரா’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகராக மாறிய ரிஷப் ஷெட்டி, நடிக்க இருக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண திரைப்படமல்ல, "ஒரு போர்க்குரல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சத்ரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளார். இந்த படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிஷப் செட்டி கூறியதாவது:
"பாரதத்தின் மிகச் சிறந்த பெருமைக்க்குரிய அரசரின் மிகப்பெரிய காவியத்தை அளிப்பதில் பெருமை கொள்கிறோம். சத்ரபதி சிவாஜி மகாராஜா திரைப்படத்தை வழங்குவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் ஆகும். இது ஒரு சாதாரண திரைப்படமல்ல; இது ஒரு போர்க்குரல். சக்தி வாய்ந்த முகலாய பேரரசின் வலிமையை சவாலுக்கு உள்ளாக்கி மறக்க முடியாத வரலாற்றின் பெருமைக்குரிய வீரனுக்கு செலுத்தும் மரியாதை.
இது ஒரு அபூர்வமான சினிமா அனுபவம். இந்த அனுபவத்தை நீங்களும் பகிர்ந்துகொள்வீர்கள். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சொல்லப்படாத கதையை அற்புதமான திரைப்படமாக கொண்டு வருகிறோம். இந்த திரைப்படத்தை காண 2027 ஜனவரி 21 வரை பொறுத்திருக்கவும்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே ’காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்திலும், "ஜெய் ஹனுமான்" என்ற படத்திலும் ரிஷப் ஷெட்டி நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு அவர் சத்ரபதி சிவாஜி படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Our Honour & Privilege, Presenting the Epic Saga of India’s Greatest Warrior King – The Pride of Bharat: #ChhatrapatiShivajiMaharaj. #ThePrideOfBharatChhatrapatiShivajiMaharaj
— Rishab Shetty (@shetty_rishab) December 3, 2024
This isn’t just a film – it’s a battle cry to honor a warrior who fought against all odds, challenged… pic.twitter.com/CeXO2K9H9Q
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments