இது ஒரு சாதாரண திரைப்படம் அல்ல.. போர்க்குரல்! ரிலீஸ் தேதியை அறிவித்த 'காந்தாரா' ரிஷப் ஷெட்டி..!

  • IndiaGlitz, [Tuesday,December 03 2024]

‘காந்தாரா’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகராக மாறிய ரிஷப் ஷெட்டி, நடிக்க இருக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண திரைப்படமல்ல, ஒரு போர்க்குரல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சத்ரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளார். இந்த படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிஷப் செட்டி கூறியதாவது:

பாரதத்தின் மிகச் சிறந்த பெருமைக்க்குரிய அரசரின் மிகப்பெரிய காவியத்தை அளிப்பதில் பெருமை கொள்கிறோம். சத்ரபதி சிவாஜி மகாராஜா திரைப்படத்தை வழங்குவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் ஆகும். இது ஒரு சாதாரண திரைப்படமல்ல; இது ஒரு போர்க்குரல். சக்தி வாய்ந்த முகலாய பேரரசின் வலிமையை சவாலுக்கு உள்ளாக்கி மறக்க முடியாத வரலாற்றின் பெருமைக்குரிய வீரனுக்கு செலுத்தும் மரியாதை.

இது ஒரு அபூர்வமான சினிமா அனுபவம். இந்த அனுபவத்தை நீங்களும் பகிர்ந்துகொள்வீர்கள். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சொல்லப்படாத கதையை அற்புதமான திரைப்படமாக கொண்டு வருகிறோம். இந்த திரைப்படத்தை காண 2027 ஜனவரி 21 வரை பொறுத்திருக்கவும்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ’காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்திலும், ஜெய் ஹனுமான் என்ற படத்திலும் ரிஷப் ஷெட்டி நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு அவர் சத்ரபதி சிவாஜி படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

என்னால் தான் ரஜினி, இளையராஜா இடையே சண்டை வந்தது: அமெரிக்க நடிகையின் பதிவு..!

என்னால் தான் இசைஞானி இளையராஜாவுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் இடையே ஒரு அழகான செல்ல சண்டை நடந்தது என அமெரிக்க பாடகி, தயாரிப்பாளர் மற்றும் நடிகை சிந்தியா என்பவர் தனது

கனமழையால் துயரம்.. தவெக தலைவர் விஜய்யின் நெஞ்சை பதற வைத்த செய்தி..!

திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது

36 வயதில் பிகினி போட்டோஷூட்.. மாலத்தீவில் தமிழ் நடிகையின் மாஸ் புகைப்படங்கள்..!

தமிழ் திரையுலகில் 36 வயதை கடந்து உள்ள நடிகை, சமீபத்தில் மாலத்தீவில் எடுத்த பிகினி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விளக்கேற்றும் வழிபாடு: ஜோதிடர் சீதா சுரேஷ் அளிக்கும் ஆன்மீக உண்மைகள்

ஆன்மீக கிளிட்ஸ் சேனலில், புகழ்பெற்ற ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள் விளக்கேற்றும் வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி பேசியுள்ளார்.

கொல்லிமலை: சித்தர்களின் ரகசியங்கள் நிறைந்த மலை

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் நெல்லை சுப்பையா அவர்கள், கொல்லிமலையின் மர்மங்கள் மற்றும் அதன் ஆன்மீக முக்கியத்துவம் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.