'காந்தாரா' அடுத்த பாகம்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி..!

  • IndiaGlitz, [Saturday,November 25 2023]

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்த ’காந்தாரா’ படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த பாகம் குறித்த முக்கிய தகவலை ரிஷப் ஷெட்டி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

கன்னட நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ’காந்தாரா’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த படம் வெறும் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது என்பதும் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ’காந்தாரா’ திரைப்படம் தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படம் ’காந்தாரா’ படத்தின் கதைக்கு முந்தின கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தின் கதைக்காக பல ஆய்வுகள் ரிசப் ஷெட்டி செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் ரிஷப் ஷெட்டி தனது சமூக வலைத்தளத்தில் ’காந்தாரா’ படத்தின் அடுத்த பாகத்தின் பர்ஸ்ட் போஸ்டர் நவம்பர் 27ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் 12.25 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்த போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கும் நிலையில் அந்த போஸ்டரில் காந்தாரா இரண்டாம் பாகம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் என மொத்தம் ஏழு மொழிகளில் உருவாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.