'விக்ரம்', 'பொன்னியின் செல்வன்' வசூலை முறியடித்ததா 'காந்தாரா'?

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் பெற்ற கமல்ஹாசனின் ’விக்ரம்’ மற்றும் மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களின் வசூலை ‘காந்தாரா’ திரைப்படத்தின் வசூல் முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ என்ற திரைப்படம் கன்னடத்தில் ரிலீஸ் ஆன நிலையில் சமீபத்தில் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்ட இந்த படம் ஒரு சில நாட்களில் 45 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை தெலுங்கில் டப் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் செய்த படம் ’கேஜிஎஃப் 2’ என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ’விக்ரம்’ மற்றும் ’பொன்னியின் செல்வன்’ படஙக்ளின் தெலுங்கு பதிப்பு அதிக வசூல் செய்து இருந்த நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு ‘காந்தாரா’ திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வசூலை பெற்று விட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அமெரிக்காவிலும் இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷன் மிகப்பெரிய வசூலை செய்து வருவதாகவும் திரையரங்குகள் அதிகப்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ’பொன்னியின் செல்வன்’ மற்றும் ’விக்ரம்’ படத்தின் ஒட்டுமொத்த வசூலை ‘காந்தாரா’ படத்தின் ஒட்டுமொத்த வசூல் இன்னும் நெருங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.