'காந்தாரா சேப்டர் 1' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இன்னும் இத்தனை மாதங்களா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கி வரும் ‘காந்தாரா சேப்டர் 1’ ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு புதிய போஸ்டர் உடன் வெளியாகியுள்ள நிலையில், அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரிஷப் செட்டியின் நடித்து இயக்கிய ’காந்தாரா’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில், இந்த படத்தின் பட்ஜெட் வெறும் ரூ.16 கோடி என்ற நிலையில், இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.450 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ’காந்தாரா’ படத்தின் முந்தைய கதை அம்சம் கொண்ட ‘காந்தாரா சேப்டர் 1’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டு இந்த படத்தின் டீசர் வீடியோ வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ன் இது குறித்த போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ள நிலையில், இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரிஷப் செட்டி முக்கிய இடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஜெயராம், ஜிசு செங்குப்தா உள்பட பலர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
𝐓𝐇𝐄 𝐌𝐎𝐌𝐄𝐍𝐓 𝐇𝐀𝐒 𝐀𝐑𝐑𝐈𝐕𝐄𝐃 🔥
— Rishab Shetty (@shetty_rishab) November 17, 2024
𝐓𝐇𝐄 𝐃𝐈𝐕𝐈𝐍𝐄 𝐅𝐎𝐑𝐄𝐒𝐓 𝐖𝐇𝐈𝐒𝐏𝐄𝐑𝐒 🕉️#KantaraChapter1 Worldwide Grand Release on 𝐎𝐂𝐓𝐎𝐁𝐄𝐑 𝟐, 𝟐𝟎𝟐𝟓.#KantaraChapter1onOct2 #Kantara @shetty_rishab @VKiragandur @hombalefilms @HombaleGroup @ChaluveG… pic.twitter.com/KLyXbj3CUj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments