'காந்தாரா டு காஷ்மீர் ஃபைல்ஸ்'.. நடிகை சப்தமி கவுடாவுக்கு கிடைத்த புரமோஷன்!

  • IndiaGlitz, [Thursday,January 26 2023]

சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் மழை பொழிந்த 'காந்தாரா’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை சப்தமி கவுடா பாலிவுட் திரையுலகில் என்ட்ரி ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

’காந்தாரா’ திரைப்படத்தில் இவரது நடிப்பிற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கும் அடுத்த திரைப்படம் ’வேக்சின் வார்’. இந்த படத்தில் நடிக்க சப்தமி கவுதமி முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கொரோனா காலத்தில் நாடு முழுவதும் மக்களை காப்பாற்ற தடுப்பூசி எந்த அளவு பயன்பட்டது என்பது குறித்த நிஜ நிகழ்வுகளுடன் கூடிய கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சப்தமி கவுடா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்

இந்த படத்தில் நடிப்பது குறித்து சப்தமி கவுடா கூறிய போது, ‘ விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மாதிரியான பெரிய இயக்குனர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி, இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின் என யாரும் கிடையாது, கதை தான் ஹீரோ, எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்துவேன்’ என்று தெரிவித்துள்ளார்.